செய்திகள் :

அந்நிய நிதி வெளியேற்றத்தால் மீண்டும் சரிந்த பங்குச் சந்தைகள்!

post image

மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் இன்றிரவு வெளியிடப்படும் பெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவு குறித்து முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்ததால், வாரத்தின் முன்றாவது நாளான இன்றும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 149.31 புள்ளிகள் சரிந்து 80,535.14 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 62.9 புள்ளிகள் சரிந்து 24,273.10 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 502.25 புள்ளிகள் சரிந்தும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 137.15 புள்ளிகள் சரிந்து 24,198.85 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸ் டாப் 30 பங்குகளில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், சிப்லா, விப்ரோ, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பவர் கிரிட் கார்ப், லார்சன் & டூப்ரோ, அதானி போர்ட்ஸ், மாருதி, என்டிபிசி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தது முடிந்தது.

இதையும் படிக்க: அதானியைவிட 2.5 மடங்கு சரிவைக் கண்ட அம்பானி!

துறை வாரியாக, பார்மா 1 சதவிகிதம் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் சரிந்தது முடிந்தது. ஆட்டோமொபைல், எனர்ஜி, பொதுத்துறை வங்கி, மெட்டல், மீடியா, ரியாலிட்டி துறை பங்குகள் 0.5 முதல் 2 சதவிகிதம் வரை சரிந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5 சதவிகிதம் சரிந்தது.

பார்தி ஹெக்ஸாகாம், ஈஐடி பாரி, கேபிஆர் மில்ஸ், ராடிகோ கெய்தான், லாயிட்ஸ் மெட்டல்ஸ், கோரமண்டல் இன்டர்நேஷனல், கோபோர்ஜ், இந்தியன் ஹோட்டல்ஸ், பிஎல்எஸ் இன்டர்நேஷன், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், 360 ஒன் வாம், கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட 240 பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டது.

உலகளாவிய கவனம் இன்று இரவு வெளியிடப்படும் பெடரல் வட்டி விகிதம் குறித்தே இருக்கும் என்ற நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து இன்று வரையான 3-வது நாள் அமர்வில், நிஃப்டி 2.3 சதவிகிதமும், சென்செக்ஸ் 2.5 சதவிகிதமும் சரிந்துள்ளது.

இன்று நிதி, மின்சாரம், கட்டுமானம் மற்றும் உலோகங்கள் ஆகிய துறைகள் நிஃப்டியை சரிய செய்தது. அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் ஹெல்த்கேர் மற்றும் ஐடி துறை பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தனர்.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்கிழமை) ரூ.6,409.86 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இதுவே அவர்கள் விற்பனை செய்த அளவில் மிகஅதிகம்.

ஆசிய சந்தைகளில் சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்தும் டோக்கியோ சரிந்து வர்த்தகமானது. நேற்று வால் ஸ்ட்ரீட் சரிந்து முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.04 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 73.22 டாலராக உள்ளது.

1.6% பங்குகளை விற்பனை செய்த ஐபிசிஏ லேபாரட்டரீஸ் புரமோட்டர்ஸ்!

புதுதில்லி: ஐபிசிஏ லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் புரமோட்டர்களில் ஒருவரான உஷா மதுகர் சந்துர்கர், நிறுவனத்தின் 1.6% பங்குகளை ரூ.600 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.மும்பை பங்குச் சந்தையிடம் உள்ள தரவுகளின்படி,... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.84.94 ஆக முடிவு!

மும்பை: பெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவு குறித்து வர்த்தகர்கள் காத்திருப்பதால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.84.94 ஆக முடிவடைந்தது.இறக்குமதியாளர்கள் ம... மேலும் பார்க்க

ரீநியூ கிரீன் எனர்ஜியில் 31.20% பங்குகளை வாங்கும் ஜிண்டால்!

புதுதில்லி: 'ரீனியூ கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் 31.20% பங்குகளை வாங்க, ஜிண்டால் சா ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும், பங்கு கையகப்படுத்துதலின் நிதி விவரங்களை குறித்து நிறுவனம் வெளியிடவில்லை.ரிநியூ கி... மேலும் பார்க்க

டிசம்பர் 20 அன்று சந்தைக்கு வரும் வென்டிவ் ஹாஸ்பிடாலிட்டியின் ரூ.1,600 கோடி ஐபிஓ!

புதுதில்லி: வென்டிவ் ஹாஸ்பிடாலிட்டியின் ரூ.1,600 கோடி ஆரம்ப பங்கு விற்பனையானது (ஐபிஓ) டிசம்பர் 20ஆம் தேதியன்று, பங்கு ஒன்றுக்கு ரூ.610 முதல் ரூ.643 என்ற விலையை நிர்ணயித்தது, பொதுமக்களிடம் சப்ஸ்கிரிப்... மேலும் பார்க்க

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.90-ஆக உயர்வு!

மும்பை: ஏமாற்றமளிக்கும் வர்த்தக சமநிலை தரவுகள் மற்றும் பலவீனமான உள்நாட்டு சந்தைகளால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.90 ஆக நிலைபெற்றது.பொருளாதாரத்தின் மந்... மேலும் பார்க்க

கரடியின் கட்டுப்பாடில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் சரிவு!

மும்பை: அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் குறித்தும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய ப்ளூ சிப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் இன்று எச்சரிக்கையான அணுகும... மேலும் பார்க்க