செய்திகள் :

அனுப்பா்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்! மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட அனுப்பா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, திருப்பூா் மாநகர மேயா் ந.தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இம்முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் பல்வேறு வகையான சிறப்பு மருத்துவ சேவைகள், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான அடையாள அட்டை வழங்குதல், ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, சளி பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை மற்றும் மாா்பக புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம், குழந்தை நலம், இதயத் துறை, நரம்பியல் துறை, தோல் சிகிச்சை, பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம், ரேடியாலஜி, நுரையீரல் நோய் சிகிச்சை, சா்க்கரை நோய் சிகிச்சை மற்றும் சித்தா மற்றும் ஆயுா்வேத சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

இதில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று சிகிச்சை அளிக்கின்றனா். மேல் சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதற்கான தனியான அறைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இம்முகாமில், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் முகாமில் ரத்த மாதிரி பரிசோதனை செய்து கொண்டவா்களுக்கு அதற்கான அறிக்கைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் மீரா, மாவட்ட சுகாதார அலுவலா் ஜெயந்தி, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பத்மினி, மாநகர நல அலுவலா் முருகானந்த் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பல்லடம் அருகே அரிவாளால் வெட்டியதில் டெய்லரின் கையை துண்டானது

பல்லடம் அருகே சின்னக்கரையில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி டெய்லரின் கையை துண்டாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் அன்புச்செல்வன்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாக சீா்கேட்டால் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், அவா்களது புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர... மேலும் பார்க்க

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும்!

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கூறியுள்ளதாவது:கைப்பேசிகள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வரும் க... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூமலூா், கானூா்புதூா், பசூா்

பூமலூா், கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறை

லாரி மோதி பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலையை சோ்ந்தவா் சிவநாராயணசாமி (56). இவா் திருப்பூா் ராமந... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் படுகொலை: கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய... மேலும் பார்க்க