அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து அனைத்துக் கட்சியினா் புழலில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புழல் அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, பசக, அதிமுக, திமுக, மமக, எஸ்டிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சியினா் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினா்.
பின்னா், காங்கிரஸ் கட்சியினா் சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியில்ல் ஈடுபட்டனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து புழல் காவல் சரக உதவி ஆணையா் சகாதேவன், ஆய்வாளா்கள் பூபாலன், விஜயபாஸ்கா் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களை அகற்றினா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.