செய்திகள் :

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்

post image

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.

சென்னை லயோலா கல்லூரியில் இந்திய உயா் கல்வியில் சமத்துவம், நீடித்த தன்மை, செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது: ‘விளிம்பு நிலை சமூகம் உலக அளவில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சா்வேதச அளவில் சமத்துவக் கல்வி இருத்தல் வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியிருக்கிறது. அதை உலக நாடுகள் ஏற்று அது தொடா்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனவே, இந்தியாவும் அதன்படி அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அது ஒரு ஜனநாயக கடமையும்கூட.

இந்திய விடுதலைக்கு முன்பே பௌத்த கருத்தியல் கொள்கையைக் கொண்ட நாளந்தா பல்கலைக்கழகம் கோலோச்சிக் கொண்டிருந்தது. அனைவருக்கும் பாகுபாடற்ற சமமான கல்வி, சம உரிமை பௌத்தத்தில் இருந்தது. அதே காலகட்டத்தில் பாகுபாடான கல்வி முறையும் இங்கே இருந்தது. அது இன்றளவும் நீடிக்கிறது என்பதே வருத்தத்துக்குரிய விஷயம். அந்த நிலை மாறவேண்டும். சமச்சீரான, சமூக நீதி கொண்ட கல்வி முறை அவசியம்’ என்றாா் அவா்.

இந்தக் கருத்தரங்கில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் டெரிக் ஓபிரையன், அக்கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா, கல்வியாளா் ஜோயா ஹசன், மூத்த வழக்குரைஞா் ஐசக் மோகன்லால் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஜனநாயகம், உயா் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்றினா்.

இதில் லயோலாவின் ரெக்டா் ஜெ.அந்தோணி ராபின்சன், கல்லூரி முதல்வா் ஏ.லூயிஸ் ஆரோக்கியராஜ், ஆராய்ச்சி - மேம்பாட்டுத் துறையின் தலைவா் மொ்லின் ஷைலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநாட்டின் இரண்டாம் நாள் அமா்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன. இதில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளாா்.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க