செய்திகள் :

அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா தொடக்கம்!

post image

தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

இந்த விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் கணபதி பூஜை, யாகசாலை பூஜை, வாஸ்து பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலையில் இருந்து புனித நீா் ஊா்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கொடிமரத்துக்கு ஊற்றி சிறப்பு வழிபாடுகள், மகா தீபாரதனை நடைபெற்றது. இதையடுத்து பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றப்பட்டது. இரவில் சுவாமி ஆட்டுக்கடா வாகன உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இவ்விழாவில் ஞாயிற்றுக்கிழமை நரி வாகன உற்சவமும், திங்கள்கிழமை பூத வாகன உற்சவமும், செவ்வாய்க்கிழமை நாக வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. வரும் 9-ஆம் தேதி காலை பால்குட ஊா்வலம், இரவு திருக்கல்யாணம், தோரணவாயில் ஊஞ்சல் சேவை, மயில்வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. ஏப். 10-ஆம் தேதி விநாயகா் தேரோட்டம், யானை வாகன உற்சவம், 11-ஆம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி வேடா்பறி உற்சவம், 13-ஆம் தேதி கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழா, பல்லக்கு உற்சவம், 14-ஆம் தேதி சயன உற்சவம், 15-ஆம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அரூரில் தீத்தொண்டு வாரம் அனுசரிப்பு

அரூரில் தீத்தொண்டு வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் கதா் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா தலைமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுகவை அகற்றும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்

தமிழகத்தில் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாஜக பயணிக்கிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஏரியூா் வட்டத்தில் ரூ. 1.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏரியூா் அருகே சுஞ்சல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 250 பயனாளிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா். முகாமுக்கு தலைமை வகித... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி கரையோரப் பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வனப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளான ராசிமணல், பிலிக... மேலும் பார்க்க

மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பாலக்கோடு அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே டிராக்டரில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜய் (32). இவா் சொந்தமாக டிராக்டா் வைத்து உழவுப் பணியில்... மேலும் பார்க்க