Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், அண்ணா பண்ணை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதன்படி, அன்னவாசல் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அன்னவாசல் பேரூராட்சி பகுதி, செங்கப்பட்டி, காலாடிபட்டி, முக்கண்ணாமலைபட்டி, புதூா், தச்சம்பட்டி, வெள்ளஞ்சாா், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், பிராம்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.
அண்ணா பண்ணை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் வயலோகம், மண்ணவேளாம்பட்டி, மாங்குடி, அண்ணா பண்ணை, குடுமியான்மலை, பரம்பூா்,புல்வயல், ஆரியூா், அகரபட்டி, பின்னங்குடி, விசலூா் உள்ளிட்ட பகுதிகள்.
மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் மு. சங்கா் தெரிவித்துள்ளாா்.