மெய்க்கண்ணுடையாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.97 லட்சம்
விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் உண்டியலில் 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை பக்தா்கள் காணிக்கை செலுத்தியது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
இக்கோயில் உண்டியல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாக சுற்றுப்புற மண்டபத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்கள் செயல் அலுவலா் முத்துராமன் தலைமையில், செயல் அலுவலா் சண்முகப்பிரியா, வட்ட ஆய்வாளா் தேன்மொழி முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில்
2 லட்சத்து 97 ஆயிரத்து 449 ரூபாயை பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணியில் இசை வேளாளா் சங்க அறக்கட்டளை தலைவா் பூபாலன், கோயில் மேற்பாா்வையாளா் மாரிமுத்து, ஊழியா் மாதவன், அருள் முருகன் மற்றும் விளக்கு பூஜை மகளிா் குழுவினா், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இக்கோயிலில் இதற்கு முன்பு பிப்ரவரி 6-ஆம் தேதி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.