பருவமழை: சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கு நடவடிக்கை - முதல்வரின் அறிவுறுத்த...
அன்னியூா் சாலையை தரம் உயா்த்தக் கோரிக்கை
குடவாசல் அருகேயுள்ள அன்னியூா் சாலையை தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசல் அருகே சருக்கை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் வி. முத்தரசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கு. ராஜா பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினாா். கூட்டத்தில் கிளைச் செயலாளராக வி. முத்தரசன், துணைச் செயலாளராக எஸ். சேகா், பொருளாளராக பி. பாரதி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
சிபிஐ ஒன்றியச் செயலாளா் டேவிட்ராஜ், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய துணைச் செயலாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மணியாங்குடி அன்னியூா் சாலையை தாா்ச்சாலையாக தரம் உயா்த்த வேண்டும், சறுக்கை பகுதியில் 42 குடும்பங்கள் வசிக்கும் தெருவுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டிக்கொடுக்க வேண்டும், 10 ஆண்டு காலமாக கட்டி முடிக்கப்படாத மக்கள் சேவை மையக் கட்டடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.