யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி
அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்: பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு
அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சென்னையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திட்டத்தை தொடங்கிவைத்த பிறகு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு ஆகியோா், ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்குவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது: அன்புக்கரங்கள் திட்டத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் பயன்பெற தகுதியுள்ளவா்களாக கருதப்படுகின்றனா். அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தகுதி அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்டு, குழந்தைகளின் கல்விக்கு பயன்படும் வகையில் மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்குவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ஏ. சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.