செய்திகள் :

அபிஷேக் சர்மாவுக்கு ஜோஸ் பட்லர் பாராட்டு!

post image

இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மாவை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் நிறைவு செய்தது.

இதையும் படிக்க: பிசிசிஐ விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விவரம்!

நேற்றையப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 54 பந்துகளில் 135 ரன்கள் (7 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள்) எடுத்தார். இதன் மூலம், டி20 போட்டி ஒன்றில் அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

ஜோஸ் பட்லர் பாராட்டு

அபிஷேக் சர்மா பந்துகளை எந்த ஒரு தவறுமின்றி தெளிவாக அடித்து விளையாடியதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அவரை பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜோஸ் பட்லர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் வெற்றிக்கு அபிஷேக் சர்மாவைதான் பாராட்ட வேண்டும் என நினைக்கிறேன். அவர் எதிர்கொண்ட அனைத்துப் பந்துகளையும் எந்த ஒரு பிழையுமின்றி நேர்த்தியாக அடித்து விளையாடினார். கடந்த ஐபிஎல் தொடரில் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து அபாரமாக விளையாடிய விதத்தை இந்திய அணியிலும் அபிஷேக் சர்மா எடுத்து வந்துள்ளார். அபிஷேக் சர்மா மிகவும் அற்புதமாக விளையாடினார் என்றார்.

அபிஷேக் சர்மா இன்னும் அதிகமாக பந்துவீச வேண்டும்; முன்னாள் இந்திய வீரர் வலியுறுத்தல்!

அபிஷேக் சர்மா இன்னும் அதிகமான ஓவர்கள் பந்துவீச வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்ட... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு இடம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. மலேசியாவில் நடைப... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கான போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. போட்டிகள் ... மேலும் பார்க்க

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் கிறிஸ் கெயில்!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் விளையாடவுள்ளார்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி மார்ச் ... மேலும் பார்க்க

சஞ்சு சாம்சனுக்கு காயம்; மீண்டும் அணியில் இடம்பெறுவாரா?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் (பிப்ரவரி 2) நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்ட... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம்: கௌதம் கம்பீர்

டி20 போட்டிகளில் இந்திய அணி அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புவதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் (பிப்ரவரி ... மேலும் பார்க்க