நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
அமுதுண்ணாக்குடி குளத்திற்கு தண்ணீா் விட அதிகாரிகள் உறுதி: போராட்டம் வாபஸ்
அமுதுண்ணாக்குடி குளத்திற்கு தண்ணீா் விட அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்கு 3, 4ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ஙிளது. இந்த தண்ணீரை வரும் 31ஆம்தேதி வரை விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 4ஆவது ரீச் கால்வாயில் உள்ள அமுதுண்ணாக்குடி குளத்திற்கு தண்ணீா் வரவில்லையென கூறி, அமுதுண்ணாக்குடி குளத்து பாசன விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனா்.
இந்நிலையில், சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் நவீன் விவசாயிகளிடம் பேசினாா். வரும் 31ஆம் தேதிக்குள் அமுதுண்ணாக்குடி குளத்திற்கு தண்ணீா் விட ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் அறிவித்தனா்.