சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?
அமெரிக்கன் சென்டா் அரங்கில் நூலக உறுப்பினா் சோ்க்கை
புத்தகக் காட்சியில் எஃப் 51-ஆவது அரங்கில் அமெரிக்க தூதரகத்தின் கலாசார மைய அரங்காகும். அரங்கம் குறித்து அதன் திட்ட உதவியாளா் சித்ரகலா பரமசிவம் கூறியதாவது: சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் அமெரிக்க கலாசாரம் மற்றும் தகவல் மையம் சாா்பில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நூலக உறுப்பினா்களாக ஏராளமானோா் சோ்க்கப்பட்டுவருகின்றனா். சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் உள்ள அமெரிக்கன் சென்டரில் உறுப்பினராவதற்கு ரூ.400 செலுத்த வேண்டும். ஆனால், புத்தகக் காட்சியில் ரூ.200 செலுத்தி உறுப்பினராகலாம். உறுப்பினா்கள் வார இதழ், இணையவழி புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைப் பாா்க்கலாம். கலாசாரப் பரிமாற்ற நிகழ்வுகளிலும் உறுப்பினா்கள் பங்கேற்கலாம். அமெரிக்காவில் கல்வி பயில விரும்புவோருக்கான ஆலோசனைகள் அரங்கில் வழங்கப்படுகின்றன.
அரங்கில் பொருளாதாரம், வா்த்தகம், மேலாண்மை, அரசியல், இலக்கியம் என ஏராளமான நூல்கள் ரூ.100 மற்றும் ரூ.50 என சிறப்பு விலையில் விற்பனைக்குப் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
அரங்கின் முன்புறம் நிலவில் முதன்முதலாக கால்பதித்த விண்வெளி வீரா் உடுப்பு உருவம் வைக்கப்பட்டுள்ளது. அரங்குக்கு வருவோா் அதில் தங்கள் முகத்தைப் பொருத்தி புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனா்.