அமெரிக்காவில் இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521% வரி விதிப்பு! இந்தியாவுக்கு பாதிப்பா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521% வரி விதிக்கப்பட்டுள்ளது.
கம்போடியா, வியத்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக திங்கள்கிழமை(ஏப். 21) அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் சோலார் உபகரணங்கள் பல வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக உள்நாட்டு தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.