அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள கெஞ்சும் உலக நாடுகள்: டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபராகி, உலக பொருளாதாரத்தையே வீழ்ச்சியடைய செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துவரும் டொனால்ட் டிரம்ப், வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள உலக நாடுகள் தன்னிடம் கெஞ்சுவதாக மிகத்தரம் தாழ்ந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக என்னை தொலைபேசியில் அழைக்கும் உலக நாட்டுத் தலைவர்கள் பலரும், ஒப்பந்தத்துக்காக உயிரை விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர், எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல், தயவு செய்து, தயவு செய்து சார் எங்களுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறோம் என்ன வேண்டுமானாலும் என்று கூறுகிறார்கள்.
இந்த பேச்சின்போது அவர் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், கடந்த வாரம் வியட்நாம் பொதுச் செயலர், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்வதற்காக தங்களது வரியை பூஜ்ஜியம் அளவுக்குக் கூட குறைத்துக் கொள்கிறோம் என்று அனுப்பிய தகவலை வெளியிட்டிருந்தார்.
மேலும், தென்கொரியாவின் பொறுப்பில் உள்ள அதிபர், தன்னைத் தொடர்பு கொண்டு வணிக ஒப்பந்தங்கள் குறித்து பேசியதாக கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார் டொனால்ட் டிரம்ப்.
ஆனால், இந்த அழைப்புகளை உறுதி செய்யும் வகையில் வெள்ளை மாளிகை எந்த அழைப்புப் பதிவுகளையும் வெளியிடவில்லை.
மேலும் டிரம்ப் பேசுகையில், எந்த மோசமான விஷயத்தை நான் செய்துகொண்டிருக்கிறேன் என்பது எனக்கத் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்ற எனக்குத் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்கும் தெரியும். அதனால்தான் நீங்கள் எனக்கு வாக்களித்தீர்கள் என்று கூறி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.