சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!
அமெரிக்கா: டிரக் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!
அமெரிக்காவில் சாலையில் டிரக்கை தவறுதலாக திருப்பி, விபத்தை ஏற்படுத்திய சீக்கியரால் சர்ச்சையாகியுள்ளது.
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தில் செயின்ட் லூசி கவுன்டி சாலையில் டிரக்கை ஓட்டிச் சென்ற இந்திய வம்சாவளியான சீக்கியர் ஒருவர், சாலையில் வாகனத்தைத் திருப்பியபோது, டிரக்கின் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவர் விபத்து ஏற்படுத்திய சாலையில், வாகனத்தைத் திருப்புவது என்பது ஒரு குற்றச்செயல்.
இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியதில், காரில் பயணித்த பெண் உள்பட மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதனையடுத்து, டிரக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் சீக்கியர் என்பதைத் தவிர, வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சட்டவிரோதமாகக் குடியேறியவருக்கு கலிஃபோர்னியாவில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது, அவரால் 3 பேர் இறந்துள்ளனர் என்று விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும், கைது செய்யப்பட்டவர் சட்டவிரோதமாகக் குடியேறியவரா? என்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கப் பெறவில்லை. அப்படியிருக்கையில், அவரை சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்று அந்நாட்டினர் கூறுகின்றனர். இதன்மூலம், அவர்கள் மறைமுகமான இனவெறித் தாக்குலில் ஈடுபடுவது தெரிவதாகவும் சிலர் பதிவிடுகின்றனர்.