செய்திகள் :

அமெரிக்க கல்வித் துறையைக் கலைத்தார் டிரம்ப்!

post image

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.

மேலும், கல்வித் துறையை மாகாணங்களின் பொறுப்புக்கு மாற்றியுள்ளார். இதனால், மத்திய கல்வித் துறை ஊழியர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது.

முதல்முறையாக அதிபராக பொறுப்பேற்றபோதே கல்வித் துறையைக் கலைக்கும் பணிகளை டிரம்ப் மேற்கொண்டார். ஆனால், அமெரிக்க காங்கிரஸ் இந்த நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப், வியாழக்கிழமை மாலை அமெரிக்க மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி ஆணையர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது, கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

மாணவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கையெழுத்திட்ட டிரம்ப், ”அதிகளவிலான நிதியை செலவழித்தும் 8-ஆம் வகுப்பு மாணவருக்கு வசிக்கவும், கணித கணக்கு போடுவதிலும் சிரமம் இருக்கிறது. இதனால், கல்வித் துறையை மாகாணங்களின் பொறுப்புகளுக்கே மீண்டும் அளிக்கப்படுகிறது. தோல்வியடைந்த ஒரு அமைப்பிடம் இருந்து குழந்தைகளும் பெற்றோர்களும் விடுவிக்கப்படுகிறார்கள்” என்றார்.

இதையும் படிக்க : லண்டன் விமான நிலையம் இன்று இயங்காது! ஏன்?

அமெரிக்க கல்வித்துறையின் கீழ் 1,00,000 அரசுப் பள்ளிகள் மற்றும் 34,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளின் 85 சதவிகித செலவீனங்களை மாகாண அரசுகள் வழங்குகின்றன.

ஆனால், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அமெரிக்க மத்திய கல்வித் துறையே கவனித்து வருகின்றது. 1.6 டிரில்லியன் டாலர் கடன் தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜோ பைடனின் ஆட்சிக் காலத்தில் கல்வித்துறையில் தனது தாராளமயமாக்கல் கொள்கையை அவர் புகுத்தியதாகவும் தேர்தலின்போது பைடன் குற்றம்சாட்டிவந்தார்.

மேலும், கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் நோக்கில் கல்வித் துறையை முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பை மாகாணங்களுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்.

இருப்பினும், அமெரிக்க செனட் அவை ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த உத்தரவு அமலுக்கு வரும்.

ஏற்கெனவே, கல்வித் துறை ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்யும் உத்தரவை டிரம்ப் வெளியிட்டிருந்த நிலையில், துறை மூடப்பட்டதால் மீதமுள்ள ஊழியர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் தொடருக்காக 44 மில்லியன் டாலர் மோசடி!

நெட்ஃபிளிக்ஸ் தொடர் இயக்குவதாகக் கூறி, 44 மில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கார்ல் எரிக் ரின்ச் கைது செய்யப்பட்டார்.ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கார்ல் எரிக் ரி... மேலும் பார்க்க

டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்!

கனடாவை இறையாண்மை கொண்ட நாடாக மதிக்கும்வரையில் பேச்சுவார்த்தை இல்லை என்றார் கனடா பிரதமர் மார்க் கார்னி. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட கனடா வணிகர்களை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி சந்தித்த... மேலும் பார்க்க

‘காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்’

தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்... மேலும் பார்க்க

சூடான் அதிபா் மாளிகையை மீட்டது ராணுவம்

சூடான் தலைநகா் காா்ட்டூமில் உள்ள அதிபா் மாளிகையை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃபிடமிருந்து மீட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. துணை ராணுவத்துடன் சுமாா் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு விலங்கிட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களின் கை- கால்களில் விலங்கிட்டு வெளியேற்றியதை கண்டித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. கடந்த ஜனவரி... மேலும் பார்க்க

துனிசியா: 2 ஆண்டுகளுக்குள் 3ஆவது பிரதமர் நியமனம்!

துனிசியாவில் புதிய பிரதமராக சர்ரா ஜாஃபரானி நியமிக்கப்பட்டுள்ளார்.துனிசியாவில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் துனிசியா பிரதமர் கமெல் மடௌரியை பதவி நீக்கம் செய்து துனிசியா அதிபர் கைஸ்... மேலும் பார்க்க