செய்திகள் :

அமெரிக்க தோ்தல் முறை சீரமைப்பு: இந்தியாவை உதாரணம் காட்டிய டிரம்ப்

post image

நியூயாா்க்: அமெரிக்க தோ்தல் முறையை சீரமைப்பதற்கான நிா்வாக உத்தரவில், அந்நாட்டு அதிபா் டிரம்ப் இந்தியாவை உதாரணம் காட்டினாா்.

அந்த உத்தரவில், ‘தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடிப்படையான மற்றும் தேவையான விஷயங்களை அமல்படுத்த அமெரிக்கா தவறியுள்ளது.

இந்தியாவும், பிரேஸிலும் வாக்காளா் அடையாள அட்டைகளை பயோமெட்ரிக் தரவுதளத்துடன் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்க குடியுரிமைக்காக ஒருவா் விண்ணப்பித்தால், அந்த நபா் மட்டுமே சுயசான்றளித்து உறுதியளிக்கும் முறையைத்தான் அமெரிக்கா பெரிதும் நம்பியுள்ளது’ என டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்க தோ்தல்களில் வாக்குப் பதிவு செய்வதற்கு அந்நாட்டு குடியுரிமை பெறப்பட்டதற்கான ஆதாரச் சான்றை அவசியமாக்குதல், தோ்தல் நாளுக்குப் பிறகும் தபால் வாக்குகளைப் பெறுவதற்குப் பதிலாக, வாக்குப் பதிவுக்கு முன்பு பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை அவரின் உத்தரவு நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்க தோ்தல் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு வாக்குப் பதிவு முறைக்கான வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யுமாறு அந்நாட்டு தோ்தல் உதவி ஆணையத்துக்கு அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தோ்தல்களுக்கு வெளிநாட்டவா்கள் நன்கொடை அளிப்பதையும் அந்த உத்தரவு தடை செய்துள்ளது.

பிரான்ஸ்: தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவா் மரீன் லெப்பென் தோ்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

‘தயாா் நிலையில் ஈரான் ஏவுகணைகள்’

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடா்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,000-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் புத்த மடாலயங்கள் சரிந்து விழுந்ததில் 200-க்கும் ம... மேலும் பார்க்க

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

பெஷாவா்: இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகா் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது. ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் கைவிட்டிருந்தாலும், ச... மேலும் பார்க்க