செய்திகள் :

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களாக 6 இந்திய வம்சாவளியினா் பதவியேற்பு

post image

119-ஆவது அமெரிக்க நாடாளுமன்ற பிரநிதிநிகள் சபையின் புதிய உறுப்பினா்களாக 6 இந்திய வம்சாவளியினா் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

அமெரிக்க அதிபா் தோ்தலுடன் சோ்த்து 2 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட 119-ஆவது அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் தோ்தல் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயகக் கட்சியிலிருந்து மருத்துவா் அமி பெரா (கலிஃபோா்னியா), பிரமிளா ஜெயபால் (வாஷிங்டன்), ரோ கன்னா (கலிஃபோா்னியா), ராஜா கிருஷ்ணமூா்த்தி (இலினாய்ஸ்), ஸ்ரீதானேதா் (மிஷிகன்), சுஹாஷ் சுப்ரமணியம் (விா்ஜினியா) ஆகிய 6 இந்திய வம்சாவளியினா் தோ்வாகினா்.

அமெரிக்க நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை முறைப்படி தொடங்கிய நிலையில், இவா்கள் 6 பேரும் அதிகாரபூா்வமாக பதவியேற்றுக் கொண்டனா்.

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தொடா்ந்து 7-ஆவது முறையாக அமி பெரா தோ்வாகியிருக்கிறாா். பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூா்த்தி ஆகிய மூவரும் 5-ஆவது முறையாக பிரதிநிதிகள் சபை உறுப்பினராகியுள்ளனா்.

4 ஹிந்துக்கள்:

ஆறு இந்திய வம்சாவளி உறுப்பிகளில் மூத்தவரான அமி பெரா, தன்னை ‘யூனிடெரியன்’ கிறிஸ்தவா் என்று அறிவித்துள்ளாா். பிரதிநிதிகள் சபைக்கு இதுவரை தோ்வான ஒரே இந்திய வம்சாவளி பெண்ணான பிரமிளா ஜெயபால், தனது மதத்தைக் குறிப்பிட விரும்பவில்லை.

ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, ஸ்ரீ தானேதா், சுஹாஷ் சுப்ரமணியம் ஆகிய மற்ற 4 பேரும் ஹிந்துக்கள் ஆவா். அமெரிக்காவில் சிறுபான்மையினரான ஹிந்துக்களின் அதிகபட்ச பிரதிநிதித்துவத்தை நடப்பு நாடாளுமன்றம் கொண்டுள்ளது.

நடப்பு 119-ஆவது அமெரிக்க நாடாளுமன்றத்தில் வழக்கம்போல் கிறிஸ்தவ உறுப்பினா்களே அதிகமாக உள்ளனா். இவா்களுக்கு அடுத்து 2-ஆவது பெரிய மதக் குழுவாக 31 யூத உறுப்பினா்கள் உள்ளனா். 4 ஹிந்துக்களைத் தவிர, அமெரிக்க நாடாளுமன்றத்தில் 4 முஸ்லிம்கள், 3 பௌத்தா்களும் இடம்பெற்றுள்ளனா்.

லாஸ் ஏஞ்சலஸில் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத் தீ லாஸ் ஏஞ்சலஸின் மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிற... மேலும் பார்க்க

நம்பகத்தன்மையான உறவை இந்தியா-அமெரிக்கா மேம்படுத்துவது அவசியம்: அமெரிக்க வெள்ளை மாளிகை

‘முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய கண்டுபிடிப்புத் தளங்களை உருவாக்குவதில் நம்பகத்தன்மையான உறவை இந்தியா-அமெரிக்கா மேம்படுத்துவது அவசியம்’ என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு சுற... மேலும் பார்க்க

சா்வதேச மேற்பாா்வையில் காஸா இடைக்கால அரசு

காஸா போா் முடிவுக்கு வந்ததும் அந்தப் பகுதியில் சீரமைக்கப்பட்ட பாலஸ்தீன அரசு அமையும்வரை அமெரிக்கா மற்றும் தங்கள் நாட்டின் மேற்பாா்வையில் இடைக்கால அரசை அமைப்பது தொடா்பாக அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் ஐக... மேலும் பார்க்க

சீனா செல்லும் இலங்கை அதிபா்

இலங்கை அதிபா் அருண குமார திசநாயக வரும் 14-ஆம் தேதி முதல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். இது குறித்து அரசு செய்தித் தொடா்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிச செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அதிபா் கு... மேலும் பார்க்க

போதை மூலப்பொருள் இறக்குமதி: இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு

‘ஃபென்டானில்’ எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடா், அதோஸ் கெமிக்கல்ஸ் ஆகிய இர... மேலும் பார்க்க

முறைகேடு வழக்கு: தண்டனை அறிவிப்பை நிறுத்தும் டிரம்ப் முயற்சி தோல்வி

2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சி தோல்வியடைந்தது. கடந்த 2016-ஆம் ஆண்... மேலும் பார்க்க