செய்திகள் :

அமெரிக்க விமான விபத்து நடந்தது எப்படி? எச்சரிக்கையை மீறிய ராணுவ ஹெலிகாப்டர்! முழு விவரம்

post image

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ பயிற்சி ஹெலிகாப்டரும் நேருக்குநேர் மோதி புதன்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.

போடோமாக் நதியில் பயணிகள் விமானம் விழுந்த நிலையில், இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்தது எப்படி?

கன்சாஸில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸுக்காக இயக்கப்படும் பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் விமானம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 7.30 மணி) வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே வந்தடைந்தது.

இந்த விமானத்தில் 60 பயணிகள், 4 விமான ஊழியர்கள் பயணித்தனர்.

ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முற்பட்டபோது, பிளாக்ஹாக் வகை ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.

சுமார் 400 அடி உயரத்தில் 140 மைல் வேகத்தில் வந்துகொண்டிருந்த விமானம் வெடித்து, போடோமாக் நதியில் விழுந்தது. வெள்ளை மாளிகைக்கு வெறும் 3 மைல் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது.

ரீகன் தேசிய விமான நிலையத்தில் சேவைகள் நிறுத்தம்.

பயிற்சி ஹெலிகாப்டர்

பயணிகள் விமானத்துடன் மோதியது அமெரிக்க ராணுவத்தின் பயிற்சி விமானம் என்பது தெரியவந்துள்ளது.

வீரர்களின் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் இந்த ஹெலிகாப்டரில் 3 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹெலிகாப்டரில் பயணித்த 3 வீரர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதையும் படிக்க : அமெரிக்க விமான விபத்து: 19 சடலங்கள் மீட்பு!

எச்சரிக்கையை மீறியதால் விபத்து?

கனடாவில் 2004 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பாம்பார்டியர் சிஆர்ஜேச்-701 இரட்டை என்ஜின் ஜெட் வகை விமானத்தைதான் விபத்தில் சிக்கியது. இதில், 70 பேர் வரை செல்லலாம்.

இந்த விமானம் ரீகன் தேசிய விமான நிலையத்தை அடைவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக, விமான நிலையத்தின் குறுகிய ஓடுபாதையான 33 இல் விமானத்தை தரையிறக்க முடியுமா என்று விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானியிடம் கேட்டுள்ளனர்.

இதற்கு விமானி முடியும் என்று பதிலளித்த பின்னர், விமானத்தை தரையிறக்க அனுமதி அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விமானத்தின் வேகத்தையும் உயரத்தையும் விமானி குறைத்துள்ளார்.

சரியாக 30 நொடிகளுக்கு முன்பு, அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த ஹெலிகாப்டரை ரேடியோ மூலம் தொடர்பு கொண்ட விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரி, ’உங்கள் பார்வைக்கு சிஆர்ஜே (பயணிகள் விமானம்) தெரிகிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஹெலிகாப்டரில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மீண்டும் மற்றொரு அழைப்பில் சிஆர்ஜே பின்னால் செல்கிறீர்கள் என்று தெரிவித்த அடுத்த நொடியில் ஹெலிகாப்டரும் விமானமும் மோதி விபத்துக்குள்ளானது.

சரியாக விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து 2,400 அடி தொலைவில் பயணிகள் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஹெலிகாப்டரும் விமானமும் நேருக்குநேர் மோதும் காட்சிகள் கென்னடி மையத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து, ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானம் வெடித்து விழுந்த போடோமாக் நதியில் தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன. அனைத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் சிரமத்துக்கு மத்தியில் நதிக்குள் தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.

வெள்ளை மாளிகையும் அமெரிக்க விமானப் போக்குவரத்துறையும் விபத்தை உறுதி செய்துள்ளன.

வெள்ளை மாளிகை அருகே மிகுந்த கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ள வாஷிங்டன் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பயிற்சி ஹெலிகாப்டர் எப்படி ஓடுதள பாதையில் வந்தது? இதனை உறுதி செய்யாமல் விமானம் தரையிறங்க எப்படி அனுமதிக்கப்பட்டது? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.

இந்தியாவுடனான கொள்கை: அமெரிக்கா மறுஆய்வு

இந்தியாவுடனான அமெரிக்காவின் கொள்கை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான கீழவை குழு (ஹவுஸ் கமிட்டி) ... மேலும் பார்க்க

மேலும் 8 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் எட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் வியாழக்கிழமை விடுவித்தனா். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் போா் நிறுத்த... மேலும் பார்க்க

தைவான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், சியாயி மாவட்டத்தின் டாபு பகுதியில் காலை 10.11 மணிக்கு ஏற்பட்டது. தலைநகா் தைபேக்கு 2... மேலும் பார்க்க

அமெரிக்கா பிறப்புசாா் குடியுரிமை ரத்து மசோதா

உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்போரின் குழந்தைகள், அமெரிக்காவில் பிறந்த ஒரே காரணத்தை வைத்து நாட்டின் குடியுரிமை பெறும் உரிமையை ரத்து செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப... மேலும் பார்க்க

ஹெலிகாப்டா் - விமானம் மோதல்: 67 போ் உயிரிழப்பு: அமெரிக்காவில் நடுவானில் கோர விபத்து

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரா்களுடன் வந்த ராணுவ ஹெலிகாப்டரும் புதன்கிழமை இரவு மோதி வெடித்துச் சிதறியதில் 67 போ் உயிரிழந... மேலும் பார்க்க

இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போா் விமானங்கள்: பிரான்ஸுடன் விரைவில் ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்காக, பிரான்ஸுடன் விரைவில் ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.... மேலும் பார்க்க