BB Tamil 8 Grand Finale: ``ஜெயிச்சுட்டு சொன்னாதான் கேட்பாங்கன்னு சொல்வாங்க ஆனால்...
அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்
நிதி ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.43 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
36 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை மீண்டும் கொடுக்க தயாராக இருக்கிறோம். இடைத்தேர்தல் நடப்பதால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?. இடைத்தேர்தலால் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையே வராது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை வேண்டாத வேலையாக பார்க்கிறோம். 9 மாதங்கள் மட்டுமே எம்எல்ஏவாக இருப்பவரால் ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை.
குறைவாகவே கடன் பெற்றுள்ளோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
திமுக ஆட்சியின் மீது இருக்கக்கூடிய வெறுப்பை மறைப்பதற்கு ஆளுநரை பகடைக்காயாக பயன்படுத்துகிறது. நல்ல பணி செய்யக்கூடிய ஆளுநரை ஏன் மாற்ற வேண்டும். ஆளுநர் மீது இருக்கக்கூடிய பயத்தில் முதல்வர் இது போன்று பிதற்றுகிறார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் டாஸ்மாக்தான் நம்பர் ஒன். ஆனால் ரேஷன் கடைகளில் உங்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.