``அடுத்த குறி கிறிஸ்தவர்கள் மீதுதான்..." - எச்சரிக்கும் ராகுல் காந்தி
அம்பா தேவி கோயிலில் குஜராத் அமைச்சர் வழிபாடு!
சூரத்தில் உள்ள அம்பா தேவி கோயிலில் சைத்ர நவராத்திரியின் எட்டாவது நாளை முன்னிட்டு குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வழிபாடு செய்தார்.
வழிபாட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் அமைச்சர். .
நவராத்திரி நாளில் அம்பா தேவியைத் தரிசிக்கும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நவராத்திரியின் குறிப்பாக அஷ்டமி, நவமியின்போது, சூரத்தில் உள்ள அம்பா தேவி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
சத்ரபதி சிவாஜி மகாராஜா சூரத்துக்கு வந்தபோது அம்பா தேவியை வழிபட்டுச் சென்றார். மகா அஷ்டமியான இன்று தேசிய தலைநகரில் உள்ள சத்தர்பூரின் ஸ்ரீ ஆத்ய காத்யாயனி சத்திபீட கோயிலிலும், ஜண்டேவாலன் கோயிலிலும் காலை ஆரத்தி செய்யப்பட்டது. அங்கு ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.
இந்துக்கள் ஆண்டு முழுவதும் நான்கு நவராத்திரிகள் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் சைத்ர நவராத்திரியும், சாரதா நவராத்திரியும் பரவலாக மக்களால் கொண்டாடப்படுகின்றன என்று அவர் கூறினார்.