Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
அம்பேத்கர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நினைவிடம், இந்தூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள மோவ் கன்டோன்மென்ட்டின் காளி பால்டன் பகுதியில் அவர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கரின் நினைவிடம் வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தின் மைய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது அஸ்திகலஷத்தை (சாம்பலை) தரிசனம் செய்தார் என்று அம்பேத்கர் நினைவு சங்கத்தின் செயலர் ராஜேஷ் வான்கடே தெரிவித்தார்.
அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது ஏன்?: அமைச்சர் செந்தல்பாலாஜி விளக்கம்
பின்னர் நினைவிட கட்டடத்தின் முதல் தளத்திற்குச் சென்ற ராஜ்நாத் சிங், அம்பேத்கரின் வாழ்க்கையை சித்தரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை பார்வையிட்டார் என்று வான்கடே கூறினார்.
முன்னதாக, இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மோவ் கன்டோன்மென்ட்டில் உள்ள இராணுவப் போர்க் கல்லூரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து, மோவ் கன்டோன்மென்ட்டில் அதிகாரிகள் மற்றும் வீரர்களிடம் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.