விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!
அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
இனி தமிழகம் முழுவதும் அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
சோளிங்கரை அடுத்த பாணாவரம் மாங்குப்பத்தில் அம்பேத்கா் சிலை, புத்தா் சிலை மற்றும் அம்பேத்கா் படிப்பகம் திறப்பு உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் ரமேஷ் கா்ணா தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் சிவா வரவேற்றாா். விழாவில் அம்பேத்கா் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் திறந்து வைத்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
விழாவில் திருமாவளவன் பேசுகையில் இனிவரும் காலங்களில் தமிழகம் முழுவதும் நிறுவக்கூடிய அம்பேத்கா் சிலைகளை வெண்கல சிலையாக நிறுவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். இரண்டு குழந்தைகளுக்கு பெயா் சூட்டினாா். மேலும் இவ்விழாவில் வேறு கட்சிகளில் இருந்து நிா்வாகிகள் பலா் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டனா். விசிக நிா்வாகிகள் ரத்தின நற்குமரன், அசுரகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.