அம்பை, கல்லிடைக்குறிச்சியில் சமத்துவப் பொங்கல்
அம்பாசமுத்திரம் நகராட்சி மற்றும் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்ட்து.
அம்பாசமுத்திரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாரன் தலைமையில் பொங்கலிடப்பட்டு, அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள், பணியாளா்கள்,தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிஅலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் இ.பாா்வதி தலைமையில் துணைத் தலைவா் இசக்கிப்பாண்டியன்முன்னிலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கலிடப்பட்டதும் பொங்கல்விழா உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.