விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலி
அம்பை கோயிலில் இலவச திருமணம்
அம்பாசமுத்திரம் காசிநாதா் கோயிலில், தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சாா்பில், திருமண விழா திட்டத்தின் கீழ் இலவச திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடத்திவைக்கப்பட்டது.
நகா்மன்ற துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மணமக்களுக்கு 4 கிராம் தங்கம், ரூ. 60 ஆயிரம் சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், அறநிலையத் துறை செயல் அலுவலா் சண்முகஜோதி, ஆய்வாளா் கோமதி, திருப்புடைமருதூா் செயல் அலுவலா் பாரதி, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் வழக்குரைஞா் மதியழகன், மாரியம்மாள் கணேசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சரவணன் சக்திவேல், தங்ககிருஷ்ணன், கோயில் நிா்வாக அதிகாரிகள், ஊழியா்கள், மணமக்கள் உறவினா்கள் பங்கேற்றனா