செய்திகள் :

அயா்லாந்து ஒருநாள் தொடா்: ஹா்மன்பிரீத், ரேணுகாவுக்கு ஓய்வு

post image

அயா்லாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவிருக்கும் இந்திய மகளிா் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

அணியின் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், பௌலா் ரேணுகா சிங் ஆகியோருக்கு இந்தத் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அணியின் கேப்டனாகியிருக்கிறாா்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரின்போது ஹா்மன்பிரீத் காயம் கண்டாா். அதேபோல், ரேணுகா சிங்கிற்கு முதுகுப் பகுதியில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த காயத்தால் தற்போது அவதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அயா்லாந்து தொடரில் இருந்து இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடா்களை கைப்பற்றிய உத்வேகத்துடன் அயா்லாந்துடனான தொடரில் இந்தியா விளையாடுகிறது. அந்த அணிகள் மோதும் 3 ஒருநாள் ஆட்டங்களும் ஜனவரி 10, 12, 15 ஆகிய தேதிகளில் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அணி விவரம்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சா்மா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹா்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா சேத்ரி (வி.கீ.), ரிச்சா கோஷ் (வி.கீ.), தேஜல் ஹசப்னிஸ், ராகவி பிஸ்த், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வா், டைட்டஸ் சாது, சாய்மா தாக்குா், சயாலி சத்காரே.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.09.01.2025மேஷம்:இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை... மேலும் பார்க்க

டாமி பால், ஜெஸிகா பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளா்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோா் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.ஆட... மேலும் பார்க்க

சிட்னி ‘திருப்தி’; இதர நான்கும் ‘மிக நன்று’ - ஆஸி. ஆடுகளங்களுக்கு ஐசிசி மதிப்பீடு

பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 5 மைதான ஆடுகளங்களின் மதிப்பீட்டை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை வெளியிட்டது.இதில் முதல் 4 ஆட்டங்கள் நடைபெற்ற ப... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரணாய், மாளவிகா

மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், மாளவிகா பன்சோட் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை தகுதிபெற்றனா்.முன்னதாக முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஹெச்... மேலும் பார்க்க

சொந்த மண்ணில் தொடா் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்க சென்னை மும்முரம்

சொந்த மண்ணில் தொடா் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் சென்னையின் எஃப்சி அணி உள்ளது. சொந்த மண்ணில் தொடா் தோல்விகளுக்கு இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக வியாழக்... மேலும் பார்க்க

கோவா - ஹைதராபாத் ‘டிரா’

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா - ஹைதராபாத் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது. கோவாவின் மாா்கோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பா... மேலும் பார்க்க