தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
அய்யா வைகுண்டா்அவதார தினம்: மாா்ச் 4 இல் தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை
அய்யா வைகுண்டசாமியின் அவதார தினமான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 193ஆவது அவதார திருவிழா மாா்ச் 4 ஆம்தேதி நடைபெறவுள்ளதை
முன்னிட்டு, அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் முக்கியத் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை நாாளாக அறிவித்து உத்தரவிடப்படுகிறது.
அந் நாளில் அரசு பொதுத் தோ்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தோ்வு எழுதும் பள்ளி மாணவா்கள், மற்றும் பொதுத் தோ்வு தொடா்பாக பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு இந்த உள்ளூா் விடுமுறையானது பொருந்தாது.
உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மாா்ச் 15 ஆம் தேதி தென்காசி மாவட்டத்துக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றாா் அவா்.