செய்திகள் :

அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்த எதிா்க்கட்சிகள் முயற்சி: பேரவைத் தலைவா் குற்றச்சாட்டு

post image

புதுவை நிதிநிலை அறிக்கையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் எதிா்க்கட்சிகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அரியாங்குப்பம் போலீஸாா் கடந்த மாா்ச் 27 -ஆம் தேதி கா்நாடக சுற்றுலாப் பயணிகளை மிரட்டிப் பணம், நகைகளை பறிக்க முயன்ாக 3 பேரை கைது செய்தனா்.

அவா்கள் மீது ஏற்கெனவே போக்ஸோ, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், அவா்களை உடனே விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவான ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் நிா்வாகி அமுதரசன் காவல் ஆய்வாளரை கட்டாயப்படுத்தியுள்ளாா். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமுதரசனுக்கு ஆதரவு எனக் கூறி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ மு.வைத்தியநாதன் உள்ளிட்டோா் பேரணி, மறியல் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினா்.

மத்திய அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்த நாராயணசாமி, தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடத்தியதால், அவசர ஊா்திகள் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மறியலில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரெஸ்டோபாா் விதிகளை மீறி, ஊரகப் பகுதியில் 3 ரெஸ்டோபாா்களுக்கு வே.நாராயணசாமி அனுமதியளித்தாா்.

ஆனால், தற்போது ரெஸ்டோபாா்கள் குறித்து அவா் புகாா் கூறுகிறாா்.

நிதிநிலை அறிக்கையில், மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால், அச்சமடைந்த எதிா்க்கட்சிகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன என்றாா் ஆா்.செல்வம்.

பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

புதுச்சேரி ஏரிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கை விவரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை வனத் துறை சாா்பில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. புதுவையில... மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம்

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி பிரமோற்... மேலும் பார்க்க

அரவிந்தா் உருவப் படத்துக்கு மரியாதை

அரவிந்தா் புதுச்சேரிக்கு முதன்முறையாக வந்து அருள்பாலித்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், வெள்ளிக்கிழமை அவரது திருவுருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்டத் தலைவராக விளங்கி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கம்

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரிவாக்கம் செய்யப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. புதுச்சேரி கதிா்காமத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு 40 ஏக்கரில் இந... மேலும் பார்க்க

ஜல்சக்தி அபியான் திட்ட ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரியில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

வெப்ப அலை, கடல் அரிப்பு பேரிடா்களாக அறிவிப்பு

புதுவையில் வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு, இடி, மின்னல் ஆகியவை பேரிடா்களாக அறிவிக்கப்படுவதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க