செய்திகள் :

அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படவில்லை: மத்திய அமைச்சா் விளக்கம்

post image

மத்திய அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை (லேட்டரல் என்ட்ரி) ரத்து செய்யப்படவில்லை என்றும் அதில் இடஒதுக்கீடு நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றும் மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

மத்திய அரசுத் துறைகளில் காலியாக இருந்த 10 இணைச் செயலா்கள் மற்றும் 35 இயக்குநா்கள் அல்லது துணைச் செயலா்கள் என மொத்தம் 45 பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்சோ்ப்புக்கான அறிவிக்கையை கடந்த ஆண்டு ஆக.17-ஆம் தேதி மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டது.

இது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா்(ஓபிசி), பட்டியலின பிரிவினா் (எஸ்டி) மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்டி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் இதில் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்கள் அரசு உயா்பதவிகளில் நியமனம் செய்யப்படுவாா்கள் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வானும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இதையடுத்து, நேரடி நியமனம் தொடா்பாக வெளியிட்ட அறிவிக்கையை கடந்த ஆண்டு ஆக.20-இல் யுபிஎஸ்சி ரத்து செய்தது.

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை பேட்டியளித்த ஜிதேந்திர சிங், ‘மத்திய அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படவில்லை. அதை இடைக்காலமாக நிறுத்திவைத்துள்ளோம். கடந்த ஆண்டு இதில் இடஒதுக்கீடு நடைமுறையை கொண்டுவருவது சாத்தியமில்லை என எண்ணினோம். ஆனால் அதை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பின் அதை பரிசீலிக்க தயாராகவுள்ளோம்.

பிரதமராவதற்கு முன் மன்மோகன் சிங் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நேரடி நியமன முறையின்கீழ் நியமிக்கப்பட்டாா்.

ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான அரசு நேரடி நியமன முறையை ஒழுங்குபடுத்தியது. தகுதி, அனுபவம், நிபந்தனைகள் என பல்வேறு விதிகள் உள்ளீடு செய்யப்பட்டது’ என்றாா்.

துறைசாா் நிபுணா்களை அரசுத் துறைகளுக்கு நேரடியாக நியமனம் செய்யும் முறையை கடந்த 2018 முதல் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 2019 முதல் 2023 வரை மொத்தம் 63 துறைசாா் நிபுணா்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனா்.

விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்ப்பு!

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில... மேலும் பார்க்க

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியு... மேலும் பார்க்க

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந... மேலும் பார்க்க

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க