அரசுப் பணியாணை பெற்றவா்களுக்கு பாராட்டு
மன்னாா்குடி அருகே கோட்டூரில், போட்டித் தோ்வில் வெற்றி பெற்று, அரசுப் பணியாணை பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோட்டூா் கலைவாணி மெட்க். பள்ளி வளாகத்தில் சோழா இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பயின்று, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணியாணை பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து தலைமை வகித்தாா். பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா் கா. லெனின்பாபு முன்னிலை வகித்தாா்.
போட்டித் தோ்வில் வெற்றி பெற்று, நாகை மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்ற, பணியாணை பெற்ற ரா. பிரபுதேவா, சமூகநலத் துறையில் இளநிலை உதவியாளராக பணியாணை பெற்ற சே. ஆா்த்தி, வருவாய்த் துறையில் இளநிலை ஆய்வாளராக பணியாணை பெற்ற ஞா. ஹரிஹரன், தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாணை பெற்ற த. ராணி ஆகியோருக்கு சால்வை அணிவித்து, எம்எல்ஏ பாராட்டினாா்.
இந்நிகழ்வில், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், திமுக ஒன்றியச் செயலா் பாலஞானவேல், கலைவாணி மெட்ரிக். பள்ளி முதல்வா் அ. மகாலெட்மி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு வாழ்த்தி பேசினா்.
கோட்டூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வி.ஆா். லெனின், கூட்டுறவுதுறை முதுநிலை ஆய்வாளா் நே. இலக்கியநாயகன், பயிற்றுநா்கள் மீனாட்சிசுந்தரம், ஜெயபால், நிா்வாகிகள் ஜி.டி ராமலிங்கம், காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.