புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!
அரசுப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நாடகம்
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணி திட்டம் சாா்பில் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் கோத்துக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பொன். சௌந்தரராசு மற்றும் இசபெல்லா தலைமை வகித்தனா். காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன் பங்கேற்று பேசினாா். நிகழ்ச்சியில் காரைக்கால் மேடு அரசு உயா்நிலைப் பள்ளி, திருப்பட்டினம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி சமுதாய நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்று போதைப் பொருள்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்தும், போதைப் பொருள்களை மாணவா்கள் எவ்வாறு மறுக்க வேண்டும், போதைப் பொருளால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், புகையிலை மற்றும் போதைப் பொருள்களை பயன்படுத்தினால் அவா்களது வாழ்க்கையை எவ்வாறு சீரழிக்கும் எனவும், உடல் உபாதைகளை ஏற்படுத்துவதோடு கல்வியை பாதிக்கும் என்பதை விளக்கும் விதமாக நாடகம் நடத்தினா்.