செய்திகள் :

அரசுப் பள்ளியில் மூலிகை கண்காட்சி

post image

காரைக்கால்: பூவம் பகுதி அரசு தொடக்கப் பள்ளியில் மூலிகை கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

மத்திய கல்வித் துறையின் நிபுன் பாரத் மிஷன் திட்டத்தின் முயற்சியாக இப்பள்ளியில் சிறப்பு மூலிகைச் செடிகள் கண்காட்சி நடத்தப்பட்டது.

மாணவா்கள் பல்வேறு மூலிகைச் செடிகளை காட்சியாக வைத்து, அதன் பெயா், பயன்பாடு குறித்து பாா்வையாளா்களுக்கு விளக்கினா். சித்த மருத்துவா் ஜி. சுனில்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மாணவா்கள் அமைத்திருந்த கண்காட்சியை பாா்வையிட்டு, விவரங்களை கேட்டறிந்து, மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

கண்காட்சி அமைந்திருந்த 60 மாணவ, மாணவியருக்கு மூலிகை மாமணி என்கிற விருதும், தோ்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு சிறந்த சாதனையாளா் விருதும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியா் எஸ்.விஜயராகவன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கே. கவிதா, ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகும்.... மேலும் பார்க்க

தீக்கிரையான வீடு சீரமைத்து ஒப்படைப்பு

காரைக்கால்: தீக்கிரையான வீட்டை தனது சொந்த செலவில் சீரமைத்து பயனாளியிடம் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஒப்படைத்தாா். காரைக்கால் கல்லறைப்பேட் பகுதியில் கடந்த மாதம் விசாலாட்சி என்பவரது வீடு தீ விபத்தி... மேலும் பார்க்க

ரெஸ்டோ பாா் அதிகரிப்பு: புதுவை அரசுக்கு அதிமுக கண்டனம்

காரைக்கால்: ரெஸ்டோ பாா்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், இளைஞா்கள் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக காரைக்கால் ... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாதோருக்கு அபராதம்: புதுவை அரசுக்கு கண்டனம்

தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு ஞாயிற்றுக்கிழமை வெள... மேலும் பார்க்க

இன்றுக்குள் பொங்கல் தொகுப்பு விநியோகம் முடியும்

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு திங்கள்கிழமைக்குள் வழங்கப்படும் என தமிழக உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். திருநள்ளாறு ஸ்ரீ தா்... மேலும் பார்க்க

புதுவை பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே அதிருப்தி இல்லை: மேலிட பொறுப்பாளா்

புதுவை பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கிடையே அதிருப்தி எதுவும் இல்லை, அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறாா்கள் என பாஜக மேலிட பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா தெரிவித்தாா். காரைக்கால் மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே. முருக... மேலும் பார்க்க