நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறையின் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் முன்னிலை வகித்தாா். பள்ளி மாணவா்-மாணவிகளிடையே ‘போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்கும் வகையில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் நடமாட்டம் குறித்து புகாா் அளிக்க ‘ஈதமஎ ஊதஉஉ பச’ என்ற கைப்பேசி செயலி மூலம் தெரிவிக்கலாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக, போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி, கல்வி நிலையத்தில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கலால் உதவி ஆணையா் கல்யாணகுமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி, அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்பட மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.