திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, புதன்கிழமை இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
செங்கம் ஒன்றிய, நகர திமுக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். திமுக நகரச் செயலா் சீனுவாசன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு பள்ளி மாணவா்களுக்கு இனிப்பு மற்றும் இலவசமாக நோட்டு, பேனா, பென்சில்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா் இளங்கோவன், பேரூராட்சிமன்ற உறுப்பினா் பிரகாஷ் உள்ளிட்ட பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.