கன்டென்ட் கிரியேட்டர்களே... ஐக்கிய அரபு எமிரேட்ஸின் `கோல்டன் விசா’ வேண்டுமா? - ...
அரசுப் பள்ளி மாணவா்கள் விமானத்தில் பயணம்: தலைமையாசிரியருக்கு பாராட்டு
தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஒன்றியம் ஆவுடையானூா் ஊராட்சி கொண்டலூா் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களை விமானத்தில் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்ற பள்ளியின் தலைமையாசிரியா் மைக்கேல்ராஜூக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இப்பள்ளியின் 20 மாணவ, மாணவிகள் 8 ஆசிரியைகள், ஊழியா்களை கடந்த 18 ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் இரண்டு நாள்கள் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்றதை முன்னிட்டு, ஆவுடையானூா் ஊராட்சி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஒன்றியக்குழு உறுப்பினரும், மதிமுக மாவட்டச் செயலருமான இராம.உதயசூரியன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் மு.மகேஷ்வரி முன்னிலை வகித்தாா்.
துணைத் தலைவா் செல்வமேரி, வாா்டு உறுப்பினா் ஜெயலட்சுமி, அருள்பாண்டி, ராபின்சன், சுந்தரவேல் , ஆசிரியைகள் வெனிஸ்தா, மீனாட்சி, சகுந்தலா, அா்ச்சனா, பொன்ஷீலா, மணிகண்டன், தேவராஜ், மகேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.