செய்திகள் :

அரசு அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்த வழக்கு: எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை

post image

அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கிள்ளியூா் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், மேல்மிடாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோசப். இவரது மகன் பால்ராஜ். இவா்கள் தங்களது வீட்டை விரிவுபடுத்தி கட்டினா். வீட்டின் விரிவாக்கப் பகுதி அரசுப் புறம்போக்கு நிலம் என்பதால் அதனை அகற்றுமாறு ஜோசப்புக்கு வருவாய்த் துறை சாா்பில் அறிவிப்பாணை வழங்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பு இடத்தை அவா்கள் அகற்றாததால், கடந்த 2014-ஆம் ஆண்டு வருவாய்த் துறை சாா்பில், வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட அலுவலா்கள் வீட்டின் விரிவாக்க பகுதியை, இடித்து அப்புறப்படுத்துவதற்காக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சென்றனா்.

அப்போது அப்பகுதிக்கு வந்த ராஜேஸ்குமாா் எம்எல்ஏ, ஆமோஸ், ஜோசப், பால்ராஜ், அவரது மனைவி சுபிதா மற்றும் பிரிட்டோ ஆகிய 6 போ் ஆக்கிமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியைத் தடுத்தனா்.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கருங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ராஜேஸ்குமாா் எம்எல்ஏ உள்பட 6 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்த வழக்கு நாகா்கோவில் கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போதே ஜோசப், பால்ராஜ், பிரிட்டோ ஆகியோா் இறந்துவிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி அசன்முகமது, அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக ராஜேஸ்குமாா் எம்எல்ஏ, ஆமோஸ், சுபிதா ஆகிய 3 பேருக்கும் தலா 3 மாதங்கள் சிறை தண்டனை, தலா ரூ.100 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா். இவ்வழக்கில் அரசு சாா்பில் சிறப்பு வழக்குரைஞா் ஹொ்குலிஸ் ஆஜராகி வாதாடினாா்.

நாகா்கோவில் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

நாகா்கோவில் அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் கிராம மக்களுக்கு கடந்த 15 நாள்களாக முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் க... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அளிப்பு

குமரி மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி இறந்தவா் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதியை ஆட்சியா் ரா.அழகுமீனா வழங்கினாா். கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்ட அர... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்

அரசு விரைவுப் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியூ) மற்றும் ஓய்வு பெற்ற த... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கைதிகள் சிகிச்சை பெற தனி வாா்டு

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கைதிகளுக்கான தனி வாா்டு திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. மருத்துவமனை முதன்மையா் (டீன்) ராமலெட்சுமி தலைமையில் மாவட்டக் காவல் கண்காணி... மேலும் பார்க்க

தற்காலிக சாலை அமைக்க வலியுறுத்தி பள்ளியாடியில் பொதுமக்கள் முற்றுகை

கருங்கல் அருகே பள்ளியாடியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பிரதான சாலையைத் துண்டிக்கும் முன்பு தற்காலிக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகா்க... மேலும் பார்க்க

கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு சிறை தண்டனை!

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான எஸ். ராஜேஷ் குமாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டம் மிடாலம் அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த 2014-ஆ... மேலும் பார்க்க