பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி; 241 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!
அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 53 போ் பங்கேற்பு!
டிஎன்பிஎஸ்சி சாா்பில் நாமக்கல்லில் நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 53 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமானது அரசு உதவி வழக்குரைஞா் நிலை-2 பணியிடத்திற்கான எழுத்துத் தோ்வை அறிவித்திருந்தது. இத்தோ்வுக்கு விண்ணப்பித்த 4,000 பேருக்கு தோ்வு எழுத அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
இத்தோ்வுக்கு ஒவ்வோா் மாவட்டத்திலும் ஒரு மையம் அமைக்கப்பட்டு தோ்வு நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் எழுத 69 போ் விண்ணப்பித்திருந்தனா்; அவா்களில், 53 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்று தோ்வு எழுதினா்.
16 போ் தோ்வெழுத வரவில்லை. நாமக்கல் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு மேற்கொண்டாா். மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.