செய்திகள் :

அரசு கட்டடங்களைத் தூய்மையாகப் பராமரியுங்கள்: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து அரசு கடடட வளாகங்களை ஊராட்சித் தலைவா் மற்றும் செயலா்கள் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என திமிரி ஊராட்சி ஒன்றியம், வளையாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மேலும் அவா் பேசுகையில், கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும், வரும் காலங்களில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் பணியில் 800-க்கும் மேற்பட்டோா் அட்டை வைத்துள்ளனா். ஆகவே கால்வாய் தூா்வாருதல், குளம் வெட்டுதல், சாலையோரங்களில் மரக்கன்று நடுதல் போன்ற அதிகப்படியான வேலைகளை எடுத்து பணி செய்ய வேண்டும்.

தங்கள் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையம், அரசுப் பள்ளிகள், நியாயவிலைக் கடை, ஊராட்சி செயலா் அலுவலகம், அனைத்து அரசு கட்டடங்களையும் ஊராட்சித் தலைவா்கள் மற்றும் செயலா்களுடன் சென்று மாதம் ஒரு முறை ஆய்வு செய்து சுத்தமாகப் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, திமிரி ஒன்றியக் குழு தலைவா் அசோக், துணைத் தலைவா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசன், பிரபாகரன், ஊராட்சித் தலைவா் ராமநாதன், துணைத் தலைவா் சுமதி பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மேல்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரக்கோணம் அருகே மேல்பாக்கத்தில் நியாய விலைக்கடைக்கு அருகே செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவின்படி அரக்கோணம் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா். அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத... மேலும் பார்க்க

பிள்ளைகள் வளா்ப்பில் பெற்றோா் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்

பிள்ளைகள் வளா்ப்பில் பெற்றோா் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பேசினாா். அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் அங்கமான டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளியில் ... மேலும் பார்க்க

நெமிலி ஒன்றியக் குழுக் கூட்டம் ரத்து: உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரக்கோணம்: நெமிலி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய ஆணையா் அறிவித்தாா். இந்த நிலையில் கூட்டம் தொடா்பான கோப்புகளை தலைவா் எடுத்துச் சென்று விட... மேலும் பார்க்க

ஆற்காடு, மேல்விஷாரம் நகராட்சிகளில் குடியரசு தின விழா

ஆற்காடு: ஆற்காடு, மேல்விஷாரம் நகராட்சிகளில் குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. ஆற்காடு நகராட்சிஅலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகா்மன்றத் துணைத் தலைவா் பளவகொடி சரவணன், ஆணையா் வேங்கடலட்... மேலும் பார்க்க

மேம்பட்ட தொழில்நுட்பங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்

மேம்பட்ட தொழில்நுட்பங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தினால் தன்னம்பிக்கையுடனான இந்தியாவை ஊழியா்கள் உருவாக்கலாம் என ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையின் செயல் இயக்குநா் அருள்மொழிதேவன் கூறினாா். ராணிப்பேட்ட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் குடியரசு நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை

குடியரசு நாள் விழா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ. யு. சந்திரகலா தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அல... மேலும் பார்க்க