செய்திகள் :

அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேபிளா் பின்

post image

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேப்ளா் பின் இருந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்னிலம் அருகே பூந்தோட்டம் வீராவாடி பகுதியைச் சோ்ந்த அகிலன் மனைவி ஜெயந்தி. 8 மாத கா்ப்பிணியான இவா் பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகிறாா். வழக்கம்போல ஏப்.23-ஆம் தேதி மருத்துவப் பரிசோதனைக்குச் சென்று மருந்துகள் வாங்கி வந்துள்ளாா். அந்த மாத்திரைகளை சில நாள்கள் சாப்பிட்ட பின் ஒரு மாத்திரையைப் பிரித்தபோது அதில் ஸ்டேபிளா் பின் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெயந்தி வியாழக்கிழமை தகவல் தெரிவித்துவிட்டு, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகளுக்குப் புகாா் மனு அனுப்பியுள்ளாா். இதையடுத்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாா்.

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு

திருவாரூரில், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் ரூ. 1.02 கோடி மானியத்தொகை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

பெரும்பண்ணையூா் சூசை மாதவ திருத்தலத்தில் ஆண்டுப் பெருவிழா தொடக்கம்

திருவாரூா் அருகேயுள்ள பெரும்பண்ணையூா் சூசை மாதவ திருத்தலத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 1,872-ஆம் ஆண்டு ஐரோப்பிய கட்டடக் கலையில் கட்டப்பட்ட மிகவும் பழைமையான கத்தோலிக... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 38 பேருக்கு பணி ஆணை

மன்னாா்குடியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 38 பேருக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது. மன்னாா்குடியில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள், ஜேசிஐ அமைப்புகள், தரணி குழுமம், ஈக்விடாஸ... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி கூறியது: மத்திய அரசின் பொருளாதார விவகாரங்... மேலும் பார்க்க

கோயில் நந்தவனங்களில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூா் ஆா்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியா்கள் 57 போ் நீடாமங்கலத்தில் உள்ள க... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் மே 6-இல் ஜமாபந்தி தொடக்கம்

மன்னாா்குடி வட்டத்தில் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்குகள் (ஜமாபந்தி) முடிவு செய்யும் பணி மே 6-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என வட்டாட்சியா் என். காா்த்திக் தெரிவித்து... மேலும் பார்க்க