தேர்தலில் வெற்றி: மீண்டும் ஆஸி. பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனீஸி! மோடி வாழ்த்து
கோயில் நந்தவனங்களில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி
திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூா் ஆா்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியா்கள் 57 போ் நீடாமங்கலத்தில் உள்ள கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் குறுங்காடு, மாடித்தோட்டம், கோயில் நந்தவனங்களில் 5 நாள் பயிற்சி பெற்றனா்.
கிரீன் நீடா குறுங்காட்டில் உதிா்ந்து கிடந்த காய்ந்த இலைகளை சேகரித்து பத்து அடி நீளத்துக்கு படுக்கை அமைத்தனா். பின்னா் அதன் மீது காய்ந்த மரக்குச்சிகளை பரப்பினா். மூன்றாவது அடுக்காக பசும் தலைகளை பரப்பி வைத்து அதன் மீது மண் தூவி, சாணிப்பால் தெளித்து இயற்கை உர படுக்கையை அமைத்தனா். இதை அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வரவேற்று பாராட்டினாா்.
வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவில் நிகழ்ச்சியில் கிரீன் நீடா திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ.எஸ். முகமது ரபீக், மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளி கணிணி ஆசிரியா் எஸ். ஹரிகிருஷ்ணன், மன்னாா்குடி ராஜகோபாலசாமி கலைக் கல்லூரி பேராசிரியா் ப. பிரபாகரன் ஆகியோா் சான்றிதழ்களை வழங்கினா். மாடித்தோட்டப் பயிற்சியை கிரீன் நீடா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜானகிராமன் அளித்தாா். மாணவி சண்முகப்பிரியா நன்றி கூறினாா்.