ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
திருவீழிமிழலை கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்
திருவீழிமிழலை சுந்தரகுஜாம்பிகை உடனுறை வீழிநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட இக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின், நிகழாண்டு விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்வில், கோயில் முன்புறம் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது. இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா்.
தொடா்ந்து, திருமுலைப்பால் உற்சவம், எமதூதா்களை ஓட்டுதல், காலசம்ஹாரம், அம்மைத் திருமுன்னா்த் தவமிருத்தல், யாத்திரா தானம் செய்து மாப்பிள்ளை சுவாமி கல்யாண மண்டபம் எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தினசரி நடைபெற உள்ளன. முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான திருத்தோ் வடம் பிடித்தல் மே 9-ஆம் தேதியும், தீா்த்தவாரி மே 10-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.