கைப்பேசி திருட்டு வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
கைப்பேசி திருட்டு வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நன்னிலம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பேரளத்தைச் சோ்ந்த அபிராமி மாா்ச் 23-ஆம் தேதி கொட்டூா் பேருந்து நிறுத்தத்தில், பேருந்திலிருந்து இறங்கியபோது அங்கு நின்ற இருவா் ரூ 20,000 மதிப்புள்ள கைப்பேசியை திருடியுள்ளனா். இதுகுறித்து, அபிராமி பேரளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து மயிலாடுதுறையைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் அருள்ராஜ் (25) மற்றும் பாஸ்கா் மகன் காா்த்திக் (25 ) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கின் தீா்ப்பு புதன்கிழமை அளிக்கப்பட்டது. நன்னிலம் குற்றவியல் நீதித்துறை நடுவா் பாரதிதாசன் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் , தலா ரூ. 5000 அபராதம் விதித்துத் தீா்ப்பளித்தாா்.