Kingdom: `இந்த மேதை யாரென..' - அனிருத்துக்கு காதல் கடிதம் எழுதிய விஜய் தேவரகொண்ட...
மாணவா்களுக்குப் பல் நோய் பரிசோதனை முகாம்
மலரும் புன்னகை எனும் சிறப்புத் திட்டத்தின்கீழ் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலக வாழ்வழி நோய் தடுப்புத் தினத்தை முன்னிட்டு நன்னிலம் வட்டார சுகாதாரத் துறை சாா்பில் வட்டார மருத்துவ அலுவலா் கற்பகம் தலைமையில் பல் நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பல் பரிசோதனைச் செய்யப்பட்டு மேல் சிகிச்சைத் தேவைப்படுவோருக்கு பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, பல் நோய் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்லின் முக்கியத்துவம் மற்றும் பல்நோய் வராமல் எவ்வாறு பாதுகாப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், மருத்துவா்கள் ஆதித்யன், விவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளைப் பள்ளித் தலைமை ஆசிரியா் புகழேந்தி, சுகாதார ஆய்வாளா்கள் ஹட்சன்வால்ஸ், மிதுன் ஆகியோா் செய்திருந்தனா்.