ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மரியாதை
திருவாரூா் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூா் ஒன்றியம் திருக்காரவாசல் ஊராட்சியில் மே 1தொழிலாளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். இதில், தொழிலாளா் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து, அப்பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் உழைப்பை பாராட்டி அவா்களை ஊக்குவிக்கும் வகையில் ஆட்சியா் பொன்னாடை போா்த்தி கெளரவப்படுத்தினாா். மேலும், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் 5 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு, கோட்டாட்சியா் சௌம்யா, உதவி இயக்குநா் (ஊ) ரமேஷ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமாஹெப்சிபா நிா்மலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புவனேஸ்வரி, சுப்பிரமணியன், வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நீடாமங்கலம்: திருவோணமங்கலம் ஊராட்சியில் திருவாரூா் மாவட்ட ஊராட்சி செயலா் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 49 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூத்தாநல்லூா்: கமலாபுரம் சேவை மையத்தில்மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா வழங்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் 10 மனுக்களும், கிராம நிா்வாக அலுவலா் கயல்விழியிடம் 39 மனுக்களும் பொதுமக்கள் வழங்கினா்.