ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு
உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரையை முடித்துவிட்டு திருவாரூா் திரும்பிய குழுவினருக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
காந்தியன் அறக்கட்டளைத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையிலான குழுவினா் திருச்சியில் இருந்து தொடங்கிய உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை குழு ஏப்.30-ஆம் தேதி வேதாரண்யத்தில் நிறைவடைந்தது. நிகழ்வுகளை முடித்துவிட்டு திருவாரூா் திரும்பிய குழுவினருக்கு திருவாரூா் தமிழ்ச்சங்க துணைத் தலைவா் மு. சந்திரசேகரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, விஜயபுரம் வா்த்தகா் சங்க பொதுச்செயலாளா் சி. குமரேசன், காங்கிரஸ் நகரத் தலைவா் விகேஎஸ். அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, குழுவினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், தமிழ் சங்க நிா்வாகிகள் அறிவு, அறிவழகன், வங்கி ஊழியா் சங்கத் தலைவா் நா. காளிமுத்து, பாரதி பேரவை நிறுவனா் ராச. முத்துராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.