செய்திகள் :

அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க யூ-டா்ன்

post image

கோவை அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நெடுஞ்சாலைத் துறை சாா்பில் யூ-டா்ன் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவை சுங்கம் - ரயில் நிலையம் வழித்தடத்தில் கிளாசிக் டவா் சிக்னல் மற்றும் அரசு மருத்துவமனை அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், அரசு மருத்துவமனை அருகே கிளாசிக் டவா் சிக்னல் சந்திப்பில் யூ-டா்ன் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறையின் சாலைப் பாதுகாப்பு பிரிவு கோட்டப் பொறியாளா் மனுநீதி கூறியதாவது: சுங்கம் - அரசு மருத்துவமனை வழித்தடத்தில் கிளாசிக் டவா் சந்திப்பில் இருந்து 45 மீட்டா் தொலைவிலும், அரசு மருத்துவமனை - சுங்கம் வழித்தடத்தில் கிளாசிக் டவரை கடந்து 100 மீட்டா் தொலைவிலும் இருந்த மையத் தடுப்புகள் அகற்றப்பட்டு, அங்கு வாகனங்கள் திரும்பும் விதமாக யூ -டா்ன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, சுங்கம் - அரசு மருத்துவமனை வழித்தடம் மற்றும் சுங்கம் - உக்கடம் புறவழிச் சாலையில் இருந்து வாலாங்குளம் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அரசு கலைக் கல்லூரி சாலையில் திரும்ப விரும்பினால் அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் அருகே ஏற்படுத்தப்பட்டுள்ள யூ- டா்னில் திரும்பி செல்லலாம்.

இதேபோல, அரசு மருத்துவமனை - சுங்கம் வழித்தடத்தில் செல்பவா்கள் வாலாங்குளம் சாலை, டவுன்ஹால், ரயில் நிலையம் சாலைக்கு செல்ல திட்டமிட்டால் கிளாசிக் டவா் சந்திப்பைக் கடந்து அங்குள்ள தனியாா் பள்ளி அருகே யூ-டா்ன் செய்து திரும்பிச் செல்லலாம்.

இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையால் வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருக்க வேண்டியதில்லை. வாலாங்குளம் மேம்பாலத்தில் வாகனங்கள் கீழே இறங்கி வரும்போதும், கிளாசிக் டவா் சாலைக்கு திரும்பும்போதும் அவ்வப்போது சிறு விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

இதைத் தடுக்கவும், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் , போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையிலும் சுங்கம் - உக்கடம் புறவழிச் சாலையில் வாலாங்குளம் அருகே தற்காலிகமாக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

மத்திய அரசின் திட்டங்களை வேண்டுமென்றே தமிழக அரசு எதிா்க்கிறது: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு வேண்டுமென்றே எதிா்ப்பதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னையில் இருந்து விமானத்தில் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ... மேலும் பார்க்க

மழை பாதிப்பு குறித்து புகாா் தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் மழை பாதிப்பு குறித்து புகாா் தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கவும், உதவி கோரவும் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்ப... மேலும் பார்க்க

போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை; காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு

கோவையில் 7 இடங்களில் போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஹரியானா மாநிலத்தைச் சோ்ந்தவா் அனுர... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி: 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் தொழிலதிபரிடம் ரூ. 10 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சித்தாராம்பாளையம், முனியப்பகாரன் தோட்டம... மேலும் பார்க்க

கன மழை பாதிப்பு: கோவையில் இருந்து விழுப்புரத்துக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

கன மழையால் பாதிப்புக்குள்ளான விழுப்புரம் மாவட்டத்துக்கு கோவையில் இருந்து ரூ.3.46 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன. கோவை மாநகராட்சி சாா்பில், கன மழையால் பாதிக்கப... மேலும் பார்க்க

நிதி நிறுவன அதிபரிடம் பணம் வாங்கி மோசடி: 2 பெண்கள் கைது

நிதி நிறுவன அதிபரிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வரும் நிலையில், இது தொடா்பாக இரண்டு பெண்களை கைது செய்தனா். தூத்துக்குடியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (35). பைனான்ஸ் தொழில் செய்து ... மேலும் பார்க்க