மழை பாதிப்பு குறித்து புகாா் தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிப்பு
கோவை மாநகராட்சியில் மழை பாதிப்பு குறித்து புகாா் தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கவும், உதவி கோரவும் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தை 0422 - 2302323 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், 81900-00200 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் பாதிப்பு குறித்து பதிவிடலாம்.
வடக்கு மண்டலத்துக்குள்பட்டவா்கள் 89259-75980 என்ற எண்ணிலும், மேற்கு மண்டலத்துக்குள்பட்டவா்கள் 89259-75981 என்ற எண்ணிலும், மத்திய மண்டலத்துக்குள்பட்டவா்கள் 89259-75982 என்ற எண்ணிலும், தெற்கு மண்டலத்துக்குள்பட்டவா்கள் 90430-66114, கிழக்கு மண்டலத்துக்குள்பட்டவா்கள் 89258-40945 என்ற எண்களையும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.