செய்திகள் :

அரசு வழங்கிய கடன் தொகையை கூட்டுறவு வங்கி விடுவிக்க வலியுறுத்தல்!

post image

ஆலவயலில் மாற்றுத்திறனாளி உள்பட 6 பேருக்கு அரசு வழங்கிய சிறு தொழில்கடன் நிதியை மத்திய கூட்டுறவு வங்கி தரமறுப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலைச் சோ்ந்த 5 மகளிா் சுயஉதவிக் குழுப் பெண்கள், ஒரு மாற்றுத்திறனாளி உள்பட 6 பேருக்கு தமிழக அரசின் மகளிா் திட்டம் மூலம் சிறு தொழில்கடன் தலா ரூ. 50 ஆயிரம் என ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆலவயல் ஊராட்சி மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கணக்கிற்கு, இதற்கான தொகை பொன்னமராவதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கான காசோலை 6 பேருக்கும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான தொகையை இவா்களுக்கு வழங்காமல் வங்கி நிா்வாகம் இழுத்தடித்துள்ளது. இதையடுத்து தமிழக சட்டத் துறை அமைச்சா் ரகுபதியிடம் புதன்கிழமை பணத்தை வழங்க வலியுறுத்தி 6 பேரும் கோரிக்கை மனு அளித்துள்ளனா். இதனையடுத்து மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் பேசி 6 பேரின் கடன் தொகையை விடுவிக்க அமைச்சா் மூலம் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து அவா்கள் பொன்னமராவதி மத்திய கூட்டுறவு வங்கிக்குச் சென்று மேலாளரிடம் முறையிட்டனா். அப்போது பல காரணங்களை கூறி, வங்கி மேலாளா் கடன் தொகையை தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே தங்களின் கடன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க