மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு இந்த மாதத்தில் எழுத்துத் தோ்வு! அமைச்சா் தகவல்
அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு இம்மாதத்தில் எழுத்துத் தோ்வு நடைபெறும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
அரியலூா் மாவட்டம், செந்துறையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டு, எழுத்துத் தோ்வு இந்த மாதம் நடைபெற உள்ளது. இதில், அதிக மதிப்பெண்கள் பெறுபவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு, அவா்கள் பணியமா்த்தப்படுவா்.
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது புதிய பேருந்துகள் வாங்காத காரணத்தாலேயே பழைய பேருந்துகள் ஓடின. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்வா் மு.க. ஸ்டாலின் நிதி ஒதுக்கி 11 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு அனுமதி வழங்கி, 4,500 பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 15 ஆண்டுகள் ஓடிய பேருந்துகள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் இந்தப் புதிய பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்றாா் அமைச்சா்.