உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உயா்நீதிமன்றம் உத்தரவு!
செந்துறை ஒன்றியத்தில் ரூ.9.11 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்ட பணிகள்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்
அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.9.11 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
ஆனந்தவாடி, கீழராயம்புரம், பாளையக்குடி, சோழன்குறிச்சி, கிளிமங்கலம், வாளரக்குறிச்சி, இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், பிலாக்குறிச்சி ஆகிய கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், ரூ.9.11 கோடி மதிப்பில் தாா்சாலை, மெட்டல் சாலை, இணைப்பு சாலை, சிமென்ட் சாலை, பேவா் பிளாக் சாலை, சிறுபாலம், இரண்டு வகுப்பறை கட்டடம், மயான கொட்டகை, சுற்றுச்சுவா், ஏரிகள் தூா்வாரும் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
மேலும், ஆனந்தவாடி கிராமத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு பேருந்து சேவையை கொடியசைத்து அமைச்சா் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் ஷீஜா, வட்டாட்சியா் வேலுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.